நெல் விதைகள் பராமரிப்பு; வேளாண் துறை அறிவுரை
பல்லடம்; பல்லடம் வேளாண் அலுவலர் வளர்மதி அறிக்கை:
மாவட்டத்தில், சம்பா பருவ கால சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இச்சமயத்தில், மகசூல் இழப்பு ஏற்படாமலும், நெல் மணிகள் தரமானதாகவும் இருக்க, அறுவடைக்குப் பின், சில யுத்திகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். நெல் அறுவடைக்கு தயார் என்பதை நெல்மணிகள் மஞ்சள் நிறமாக மாறுவதை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் அறுவடை செய்வது சிறந்தது. அறுவடையின் போது, நெல்மணிகளின் ஈரப்பதம், 20 -- 25 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.
நெல் மணிகள் சேமிப்பின் போது ஈரப்பதம் அதிகமாக இருந்தால், தானியத்தின் தரம் குறைவதுடன், விதையின் முளைப்புத்திறன் குறைந்து, அதிக இழப்பை ஏற்படுத்தும். எனவே, முதல், 8 - 12 மாதம் வரை சேமித்து வைக்க, ஈரப்பதம், 13 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால், காய்ந்து போகும் வரை காத்திருப்பது நல்லது. கதிர் அடித்தல், உலர்த்துதல் ஆகியவற்றை, அறுவடை செய்த, 24 மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.
மேலும்
-
சென்னையில் கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு
-
நாங்கள் அமைதியை விரும்புகிறோம்; டிரம்ப் சொன்னதை உறுதி செய்தார் ஜெலன்ஸ்கி!
-
ஆட்டோ மீது சரிந்த 25 அடி உயர உதயநிதி படத்துடன் கட் அவுட்: காயத்துடன் தப்பிய டிரைவர்
-
அமலாக்கத்துறை மீது தாக்குதல்: சத்தீஸ்கரில் வழக்கு பதிவு
-
இறந்த தந்தை உடலை வணங்கி பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி
-
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் உட்பட இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு