பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில் பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 4 ம் தேதி முதல் 10ம் தேதி வரை, தேசிய பாதுகாப்பு வாரம் பின்பற்றப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் இது குறித்து விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பூர், காங்கயம் ரோடு அரசு போக்குவரத்து கிளை ஊழியர்களுக்கு முதலுதவி வழங்குவது குறித்து பயிற்சியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் ரமேஷ் முகாமில் கலந்து கொண்ட அரசு பஸ் ஊழியர்களுக்கு இப்பயிற்சியை அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

Advertisement