வேகத்தடை அமைப்பு; பொதுமக்கள் நிம்மதி

திருப்பூர்; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, தாமரைக்கோவில் அருகே, ரோட்டில் வேகத்தடை அமைத்து, 'ஜீப்ரா கிராஸ்' அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் அருகே உள்ள தாமரைக்கோவில் அருகே, புதிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. குடியிருப்புகள், சாய ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள், பனியன் நிறுவனங்கள் அதிக அளவு உள்ளன. ரோட்டின் வடபுறம் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள், ஊத்துக்குளி ரோட்டை கடந்து சென்றுவர வேண்டியுள்ளது. ரோட்டில், அதிக அளவு, மணல் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக, ரோட்டில் வேகமாக செல்லும் டூ வீலர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சாலை சந்திப்பு பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அங்கு தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, 'தினமலர்' நாளிதழின் திருப்பூர் பக்கத்தில், கடந்த, 26ம் தேதி செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக, பொதுமக்கள் ரோட்டை கடந்து செல்ல 'ஜீப்ரா கிராஸ்' அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.சி.எஸ்., மாடர்ன் சிட்டி, வெற்றிவேல் நகர் பிரிவில், அடிக்கடி விபத்து நடப்பதை தடுக்கும் வகையில், வேகத்தடையும் அமைக்கப்பட்டுள்ளது; விரைவில், 'ரிப்ளக்டர்' அமைத்து கொடுக்கப்படுமெனவும், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உறுதி அளித்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும்
-
நாங்கள் அமைதியை விரும்புகிறோம்; டிரம்ப் சொன்னதை உறுதி செய்தார் ஜெலன்ஸ்கி!
-
ஆட்டோ மீது சரிந்த 25 அடி உயர உதயநிதி படத்துடன் கட் அவுட்: காயத்துடன் தப்பிய டிரைவர்
-
அமலாக்கத்துறை மீது தாக்குதல்: சத்தீஸ்கரில் வழக்கு பதிவு
-
இறந்த தந்தை உடலை வணங்கி பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி
-
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் உட்பட இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
-
தவறான தகவல்களால் உண்மைகள் மாறாது: மத்திய அமைச்சருக்கு மகேஷ் பதில்