புதிய மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் நிரப்பி சோதனை ஓட்டம்

திருப்பூர் ; நான்காவது குடிநீர் திட்டத்தில், சேர்மன் கந்தசாமி நகர் மேல்நிலைத் தொட்டியில் நீர் நிரப்பி சோதனை நடத்தப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 4வது குடிநீர் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி பகுதியில் தரை மட்ட மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் கட்டியும், முன்னர் பயன்பாட்டில் இருந்த தொட்டிகளும் இணைக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், சேர்மன் கந்தசாமி நகர் பகுதியில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இத்தொட்டியிலிருந்து, 34வது வார்டு பகுதிகளில் குடிநீர் வழங்கப்படவுள்ளது. இங்குள்ள குழாய் இணைப்புகளுக்கு இதன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் திட்டமிட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியிலுள்ள தொட்டிக்கு பிரதான குழாய் வழியாக குடிநீர் கொண்டு வந்து நிரப்பி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து மேல்நிலைத் தொட்டிகளிலும், சோதனை முறையில் நீர் நிரப்பி, அழுத்தம், தொட்டி நிரம்பும் நேரம் ஆகியன கணக்கிடப்படுகிறது.
இத்திட்டப் பணிகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், குழாய்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டியில் மண், குப்பை போன்ற எந்த பொருளும் தேங்கி நின்றிருக்கும் நிலையிலும், அதனை முழுமையாக வெளியேற்றி, தொட்டியில் நிரப்பிய நீர் முழுமையாக பரிசோதனை செய்து, குடிப்பதற்கு உகந்ததாக சான்றிதழ் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்த தொட்டியில் நீர் நிரப்பி சோதனை ஓட்டம் தற்போது நடக்கிறது.
மேலும்
-
நாங்கள் அமைதியை விரும்புகிறோம்; டிரம்ப் சொன்னதை உறுதி செய்தார் ஜெலன்ஸ்கி!
-
ஆட்டோ மீது சரிந்த 25 அடி உயர உதயநிதி படத்துடன் கட் அவுட்: காயத்துடன் தப்பிய டிரைவர்
-
அமலாக்கத்துறை மீது தாக்குதல்: சத்தீஸ்கரில் வழக்கு பதிவு
-
இறந்த தந்தை உடலை வணங்கி பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி
-
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் உட்பட இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
-
தவறான தகவல்களால் உண்மைகள் மாறாது: மத்திய அமைச்சருக்கு மகேஷ் பதில்