குத்துச்சண்டை பயிற்றுனர் தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு
குத்துச்சண்டை பயிற்றுனர் தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு
கிருஷ்ணகிரி:குத்துச்சண்டை பயிற்றுனர் தேர்விற்கு, மாவட்ட விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வரும் மே, 1 முதல் இயங்கவிருக்கும்
எஸ்.டி.ஏ.டி., ஸ்டார் அகாடமி பயிற்றுனர் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப வரும், 20ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள், 23ல் பரிசீலனை மற்றும் ஆய்வு செய்யப்படும். குத்துச்சண்டை பயிற்றுனர் தேர்வு, 24ம் தேதியும், குத்துச்சண்டை பயிற்றுனர் நியமனம் வரும், 26ம் தேதியும், குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் தேர்வு, 28ம் தேதியும் நடக்கிறது. குத்துச்சண்டை பயிற்றுனருக்கு மாதம், 25,000 ரூபாய் வீதம், 11 மாதங்களுக்கு வழங்கப்படும். தேர்வு பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 20 பேருக்கு, தினமும் காலையில் முட்டை, பழ வகைகளுடன் பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 74017 03487 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பாக்., அரசின் எக்ஸ் தளப்பக்கம் இந்தியாவில் முடக்கம்
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்
-
கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள் நோக்கம் என்ன?
-
காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?
-
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!