பஹல்காம் தாக்குதல்: அதிபர்கள் டிரம்ப் மற்றும் புடின் கண்டனம்

வாஷிங்டன்: பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது: காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன!" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின் கண்டனம்
, இது "எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம்."இந்த மிருகத்தனமான குற்றத்திற்கு எந்த நியாயமும் இல்லை."பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ரஷ்யா தொடர்ந்து வழங்கும் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான இந்தியா முயற்சிகளில் அதன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், " குற்றவாளிகள் தகுந்த தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" இறந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு உண்மையான அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்.






மேலும்
-
பயங்கரவாத தாக்குதலில் திருமணமான 5 நாளில் கடற்படை அதிகாரி உயிரிழப்பு; குடும்பத்தினர் சோகம்!
-
ஆடு மேய்ப்பவர் மகன் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்
-
எங்களுக்கு நீதி வேண்டும்; பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீர்
-
தர்ஷன் கொலை செய்ததற்கு ஆதாரம்; உச்ச நீதிமன்றத்தில் அரசு வக்கீல் வாதம்
-
போதையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்