தமிழகத்தின் டேவிட், விஷால் தங்கம் * பெடரேஷன் தடகள ஓட்டத்தில்...

கொச்சி: தேசிய பெடரேஷன் தடகளத்தில் தமிழக வீரர் டேவிட் (நீளம் தாண்டுதல்), விஷால் (400 மீ., ஓட்டம்) தங்கம் கைப்பற்றினர்.
கேரள மாநிலம் கொச்சியில் 28வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகள போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 400 மீ., ஓட்டம் நடந்தது. 46.19 வினாடி நேரத்தில் ஓடிய தமிழகத்தின் விஷால், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். டில்லியின் ஜெய்குமார் (46.33), கேரளாவின் மனு (46.39) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் டேவிட் பங்கேற்றார். நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 7.94 மீ., துாரம் தாண்டி தங்கம் கைப்பற்றினார்.
வித்யா 'வெள்ளி'
பெண்களுக்கான 400 மீ., ஓட்டம் நடந்தது. 53.80 வினாடி நேரத்தில் கடந்தால் ஆசிய சாம்பியன்ஷிப்பில் (தாய்லாந்து, ஜூலை 12-16) பங்கேற்க தகுதி பெறலாம் என்ற நிலையில், தமிழக வீராங்கனைகள் வித்யா, 52.81 வினாடி நேரத்தில் வந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். உ.பி., வீராங்கனை ரூபல் (52.55) தங்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை சுபா (53.35) நான்காவது இடம் பிடித்தார். இவர்கள் அனைவரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் மஹாராஷ்டிராவின் தேஜாஸ் ஷர்ஷே (13.65 வினாடி), ரயில்வே அணியின் மானவ் (13.94), முகமது லஜான் (14.17) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
போல் வால்ட் போட்டியில் மத்திய பிரதேச வீரர் தேவ் மீனா (5.35 மீ.,) புதிய தேசிய சாதனை படைத்தார். முன்னதாக இவர் 2025, பிப்ரவரியில் 5.32 மீ., உயரம் தாண்டி இருந்தார். தமிழகத்தின் கவுதம் (5.15), ரீகன் (5.10) அடுத்த இரு இடம் பெற்றனர்.
ஆசியா: ஜோதி தகுதி
பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டம் நடந்தது. 13.26 வினாடிக்குள் வந்தால், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்ப்பில் பங்கேற்க தகுதி பெறலாம் என்ற நிலையில், ரிலையன்ஸ் அணிக்காக களமிறங்கினார் ஜோதி. இவர் 13.23 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார். ஒடிசா வீராங்கனை பிரக்ஞான் (13.40) வெள்ளி கைப்பற்றினார். தமிழகத்தின் நித்யாவுக்கு (13.42) வெண்கலம் கிடைத்தது.
மேலும்
-
காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 5 நாளில் கடற்படை அதிகாரி உயிரிழப்பு; குடும்பத்தினர் சோகம்!
-
ஆடு மேய்ப்பவர் மகன் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்
-
எங்களுக்கு நீதி வேண்டும்; பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீர்
-
தர்ஷன் கொலை செய்ததற்கு ஆதாரம்; உச்ச நீதிமன்றத்தில் அரசு வக்கீல் வாதம்
-
போதையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்