கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 25வது வார்டு, திருவீதி பள்ளம், எம்.ஜி.ஆர்., நகரில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால், மண் திட்டு களால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், கழிவுநீர் முழுமையாக வெளியேறாமல் ஒரே இடத்தில், மாத கணக்கில் தேங்குவதால், கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, திருவீதிபள்ளம், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement