கத்தியுடன் சுற்றிய நான்கு பேர் கைது

கொடுங்கையூர், கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே மர்ம நபர்கள் நால்வர், கத்தியுடன் சுற்றி திரிவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு கத்தியுடன் சுற்றி திரிந்த, கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரை சேர்ந்த சுபாஷ், 23; ஆவடி, திருமுல்லைவாயல் சாலையை சேர்ந்த பிரகாஷ், 26; மணலி, சின்ன சேக்காடு பகுதியை சேர்ந்த அசோக்குமார், 42; வியாசர்பாடி, உதயசூரியன் நகரை சேர்ந்த தாணு, 24 ஆகிய நால்வரை நேற்று கைது செய்தனர்.

Advertisement