தமிழக வாலிபால் அணிக்குஓசூர் மாணவியர் தேர்வு




ஓசூர்:பீஹார் மாநிலத்தில் அடுத்த மாதம், 4 முதல், 15ம் தேதி வரை, 18 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கேலோ இந்தியா யூத் கேம்ஸ் நடக்க உள்ளது.
இதில், கபடி, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, கோ கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தனித்தனியாக நடக்கின்றன. வாலிபால் போட்டியில் பங்கேற்கும், தமிழக பெண்கள் அணியை தேர்வு செய்யும் முகாம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
இம்முகாமில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.


ஓசூரில் இருந்து முகாமில் விளையாடிய, ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவியர் நவநீதா, தனலட்சுமி ஆகிய இருவர், தமிழக அணிக்கு தேர்வு
செய்யப்பட்டனர். அவர்களுக்கு தமிழக அணி சார்பில் தற்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மாத இறுதியில் பீஹார் மாநிலத்தில் நடக்கும் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் வாலிபால் போட்டியில் பங்கேற்க, மாணவியர் புறப்பட்டு
செல்கின்றனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவியரை, பயிற்சியாளர் மாணிக்கவாசகம் பாராட்டினார்.

Advertisement