சம்பள பாக்கி பிரச்னையால் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலி:சம்பள பாக்கி மற்றும் பி.எப்.,பணத்தை செலுத்த கோரி ஊழியர்கள் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் டுபட்டனர்.

இம்மாநகராட்சியில் செயல்படும் 10 அம்மா உணவகங்களில் பணிபுரியும் 120 ஊழியர்களுக்கு மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை .

துாய்மை பணியாளர்கள் 200 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் இத்தகைய ஊழியர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செலுத்த வேண்டிய ரூ 1.5 கோடி வருங்கால வைப்பு நிதியை முறையாக செலுத்தாமல் உள்ளனர்.

முற்றுகை



இதில் நடவடிக்கைக் கோரி நேற்று 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சி.ஐ.டி.யூ., சங்க நிர்வாகி மோகன் தலைமையில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்த மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் துணை மேயர் ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மாலையில் ஒரு சிலருக்கு சம்பளம் உடனடியாக வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கும் அடுத்தடுத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பி.எப். பணமும் ஏப்.24ல் (நாளை) மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு உடனடியாக செலுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

Advertisement