திருமணத்திற்கு மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் திருமணத்திற்கு மறுத்த மாணவியை கழுத்தை கத்தியால் அறுத்த சூர்யாவை22, போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் சூர்யா. ஸ்ரீவில்லிபுத்துாரில் உறவினர் வீட்டிற்கு வந்து செல்லும்போது 19 வயது கல்லுாரி மாணவியுடன் அறிமுகம் ஏற்பட்டு சமூக வலைதளம் மூலம் பேசி வந்தனர்.

இவரின் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி இவரை தவிர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்துார் வந்த சூர்யா , பஸ்ஸ்டாண்டில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்ற மாணவியை பின் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

மாணவி மறுப்பு தெரிவிக்கவே திருமுக்குளம் அருகே கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்து உள்ளார். அவ்வழியே வந்தவர்கள் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று இரவே மாணவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். சூர்யாவை ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement