பிரியா மாலிக் 'தங்கம்' * தேசிய மல்யுத்தத்தில் அபாரம்

கோட்டா: தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பிரியா மாலிக் தங்கம் கைப்பற்றினார்.
ராஜஸ்தானில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்டோருக்கான) தொடர் நடந்தது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 76 கிலோ பிரிவில் பிரியா மாலிக் களமிறங்கினார். 20 வயது உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் கைப்பற்றிய பிரியா, மீண்டும் சிறப்பாக செயல்பட்டு தேசிய சாம்பியன் ஆனார்.
17 வயது பிரிவு உலக சாம்பியன்ஷிப்பில் அசத்திய ஹர்சித்தா (72 கிலோ), சுராஜ் (60 கிலோ, கிரிகோ ரோமன்) தங்கம் வசப்படுத்தினர். 62 கிலோ பிரிவில், 'உலக' தொடரில் வெள்ளி வென்ற நிகிதா, இம்முறை வெண்கலம் தான் வெல்ல முடிந்தது. மஹாராஷ்டிராவின் பிரகதி தங்கம் வென்றார். தவிர, ஜஸ்பூரன் சிங் (125 கிலோ), ரீனா (55), சங்வான் (57) உள்ளிட்டோர் தங்கள் பிரிவுகளில் தங்கம் வென்றனர்.
ஒட்டுமொத்தமாக பிரீஸ்டைல், கிரிகோ ரோமன் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட ஹரியானா ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. டில்லி அணி இரண்டாவது இடம் பிடித்தது.

Advertisement