செஸ்: ஹம்பி சாம்பியன்

புனே: 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடரில் இந்தியாவின் ஹம்பி சாம்பியன் ஆனார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' தொடர் நடத்தப்படுகிறது. இதன் 5ம் கட்ட போட்டிகள் புனேயில் நடந்தது. இந்தியாவின் ஹம்பி, திவ்யா தேஷ்முக், வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி உட்பட 10 பேர் பங்கேற்றனர். நேற்று கடைசி, 9வது சுற்று போட்டி நடந்தன.
இந்தியாவின் ஹம்பி, பல்கேரியாவின் சலிமோவாவை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, துவக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றார். போட்டியின் 84வது நகர்த்தலில் ஹம்பி வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் சீனாவின் ஜு ஜினெர், ஷ்யாவின் போலினா ஷுவலோவா மோதினர். இதில் ஜு ஜினெர் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் திவ்யா-போலந்தின் அலினா, இந்தியாவின் ஹரிகா-மங்கோலியாவின் பட்குயாக் மோதிய போட்டி 'டிரா' ஆகின. ஜார்ஜியாவின் சலோமிக்கு எதிரான போட்டியை இந்தியாவின் வைஷாலி 'டிரா' செய்தார்.
முடிவில் இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காத ஹம்பி, 7.0 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 17.50 லட்சம் பரிசு கிடைத்தது. ஜு ஜினெர் (7.0 புள்ளி, 1 தோல்வி, ரூ. 12.60 லட்சம்) இரண்டாவது, திவ்யா (5.5, ரூ. 10.20 லட்சம்) மூன்றாவது இடம் பெற்றனர்.

Advertisement