சாய்பாபா பாதுகையை தொட்டு தரிசனம் செய்த பொது மக்கள்
புன்செய்புளியம்பட்டி:ஷீரடியில் இருந்து சாய்பாபாவின் பாதுகை, புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள, தென் ஷீரடி சக்தி சாய்ராம் தர்மஸ்தலாவுக்கு கொண்டு வரப்பட்டது. சாய்பாபாவின் பாதுகைக்கு, நேற்று முன்தினம் பக்தர்கள் வரவேற்பு அளித்து, பஜனை பாடியபடி சாரட்
வண்டியில் ஊர்வலமாக, தென் ஷீரடி சக்தி சாய்ராம் தர்ம ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில், நேற்று தென் ஷீரடி சக்தி சாய்ராம் தர்மஸ்தலா சார்பில், சாய்பாபா பாதுகை தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை முதல் இரவு வரை, ஆயிரக்கணக்கானோர் பாதுகையை தொட்டு வணங்கி தரிசித்தனர். முன்னதாக மதியம் நடந்த ஆரத்தி பூஜையில் ஏராளமான பஜனை பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement