பவானிசாகர் அணையில் இருந்து 2,850 கனஅடி நீர் வெளியேற்றம்


புன்செய்புளியம்பட்டி:
பவானிசாகர் அணையில் இருந்து, 2,850 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி.,

கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 369 கனஅடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 72.58 அடியாக இருந்தது. பவானிசாகர் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கனஅடி தண்ணீரும், பவானி ஆற்றில் 550 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 2,850 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி, பவானி
சாகர் அணையின் நீர் இருப்பு 12 டி.எம்.சி.,யாக உள்ளது. நீர் வரத்தை விட, திறப்பு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

Advertisement