சாலை விபத்தில் ஏட்டு பலி
மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம், நாடார்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் இளங்கோவன், 44; இவர், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 21 மாலை, 6:00 மணிக்கு, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் பணிமுடிந்த்து, 'சுவிப்ட்' காரில் வீடுதிரும்பியுள்ளார்.
மோர்பாளையம் அடுத்த தனியார் பள்ளி அருகே சென்றபோது, முன்னாள் சென்ற மினி ஆட்டோ மீது கார் மோதுவதுபோல் சென்றதால், திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
படுகாயமடைந்த ஏட்டு இளங்கோவனை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று, நேற்று முன்தினம் மதியம், வீடு திரும்பினார். ஆனால், திடீரென வயிற்றுவழி அதிகரித்ததால், சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
ஆனால், அன்று இரவு, 1:00 மணிக்கு உயிரிழந்தார். இவருக்கு, சுகந்தி, 34, என்ற மனைவியும், கனிஷ்கா, 15, என்ற மகளும் உள்ளனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
-
காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!
-
சில்லுகளை 'ஜில்'லாக்கும் லேசர்கள்
-
வைரஸ்களை கொல்லும் மொச்சை
-
அறிவியல் துளிகள்
-
சிந்தனையால் கருவிகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்