நேஷனல் பப்ளிக் பள்ளி ஜே.இ.இ., தேர்வில் சாதனை


நாமக்கல்:ஜே.இ.இ., தேர்வில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இத்தேர்வில், 35 மாணவர்கள் அட்வான்ஸ் தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இப்பள்ளியின் பிளஸ் 2 மாணவர் மைலானந்தன், ஜே.இ.இ., நுழைவு தேர்வில், 99.93 மதிப்பெண் பெற்று, மாநில, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். மேலும், இம்மாணவர் அகில இந்திய அளவில், 208வது ரேங்க் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மாணவர் மைலானந்தன் கூறுகையில், ''தினமும் திட்டமிட்டு படித்தேன். பள்ளியில் பயிற்சி தேர்வுகள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தது,'' என்றார்.
மேலும், நிரஞ்சன், -98.92, ஆரவ், -98.36, பவே சைனி-, 97.19, நிகில் விக்னேஷ், -96.80, பிரியன், -96.94, பிரியதர்ஷன், -96.66, சக்தி நந்தன், -96, அபிஷேக், 95.19, உள்பட, 35 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள், வரும், மே, 18ல் நடக்கும், ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வில் பங்கேற்க, இறுதிக்கட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் சரவணன், முதல்வர் ராஜசுந்தரவேல், மேல்நிலைப்பள்ளி முதல்வர் விக்டர் பிரேம் குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement