பாலக்கோட்டில் பைனான்சியரை கடத்த முயன்ற வெளிமாநில கூலிப்படையினர் 5 பேர் கைது
பாலக்கோடு:
பாலக்கோட்டில் பைனான்சியரை கடத்தி பணம் பறிக்க முயன்ற, வெளிமாநில கூலிப்படையினர், 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திவேல், 54. பாலக்கோட்டில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 20 அன்று அதிகாலை, 5:30 மணிக்கு நடை பயிற்சி செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். வீட்டின் அருகே, காரில் காத்திருந்த மர்ம நபர்கள், சக்திவேல் மீது, காரை மோதி தகராறில் ஈடுபடுவது போன்று நாடகமாடி, அவர் முகத்தில் மயக்க ஸ்பிரேவை அடித்துள்ளனர். சுதாரித்த சக்திவேல் போட்ட சத்தத்தால், அக்கம் பக்கத்தினர் வந்தபோது, மர்ம நபர்கள் காரில் தப்பினர்.
சக்திவேல் புகார் படி பாலக்கோடு, டி.எஸ்.பி., மனோகரன் தலைமையில், தனிப்படை அமைத்து, அப்பகுதி, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். நேற்று காலை, பாலக்கோடு அண்ணாநகரில் நீண்ட நேரமாக, மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., 500 காரில் நின்றிருந்த, 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது, ஒருவர் தப்ப முயன்றபோது, கை முறிவு ஏற்பட்டது. அவரை, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில், அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சி.ஆர்.பாளையத்தை சேர்ந்த நவீன்குமார், 38, என தெரிந்தது. அவரது கூட்டாளிகளான கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே, தொட்ட
வினாயகா லேஅவுட்டை சேர்ந்த திருவெண்குமார், 25, உடுப்பி பிரமித் சால்டானா, 29, ஹூப்ளி தேஜாஸ், 26, ஆந்திர மாநிலம், சித்துார் நவீன், 24, என தெரிந்தது. இவர்கள் அனவைரும் பணக்காரர்கள், தொழிலதிபர்களை கடத்தி, பணம் பறித்து வருவதும், ஏற்கனவே இவர்கள் மீது, பல மாநிலங்களில் ஆள் கடத்தல் வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
கடந்த, 20 அன்று சக்திவேலை கடத்தி, பணம் பறிக்க முயன்று, அது தோல்வியடைந்ததால், மீண்டும் சக்திவேலை கடத்த, அண்ணா நகரில் காரில் நோட்டமிட்டு காத்திருந்தபோது, பிடிப்பட்டது தெரிந்தது. அனைவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
பணம் பறிக்கும் நோக்கில், வெளிமாநில கூலிப்படையினர் நடமாட்டத்தால், பாலக்கோட்டில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
*******************
மேலும்
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
-
காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!
-
சில்லுகளை 'ஜில்'லாக்கும் லேசர்கள்
-
வைரஸ்களை கொல்லும் மொச்சை
-
அறிவியல் துளிகள்
-
சிந்தனையால் கருவிகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்