புருலியா, ஹவுரா ரயில்களில் தொடர் கஞ்சா, குட்கா கடத்தல்
திண்டுக்கல்:ஹவுரா - கன்னியாகுமரி ரயிலில் நேற்று 4 கிலோ கஞ்சா பார்சல்கள், புருலியா - திருநெல்வேலி ரயிலில் 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. புருலியா ரயிலில் ஏற்கனவே ஏப். 20ல் 8 கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் நேற்று அதிகாலை 4:45 மணிக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி தலைமையில் போலீசார் சோதனையில் பொதுப்பெட்டி சீட் அடியில் கேட்பாரற்று கிடந்த பையில் 4 கிலோ கஞ்சா பார்சல் இருப்பதை கண்டறிந்தனர். இதே போல் நேற்று புருலியா - திருநெல்வேலி ரயில் பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கில் 10 கிலோ குட்கா இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த ரயிலில் ஏற்கனவே ஏப். 20ல் 8 கிலோ கஞ்சா பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. வடமாநிலங்களில் இருந்து பயணிகளை போல் வரும் கடத்தல்காரர்களை கைது செய்ய சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும்
-
கருணாநிதி பெயரில் புதிய பல்கலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
டில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை
-
பாக்., அரசின் எக்ஸ் தளப்பக்கம் இந்தியாவில் முடக்கம்
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்
-
கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள் நோக்கம் என்ன?