இரு சிறுமியருக்கு 'தொல்லை' 61 வயது டெய்லர் கைது

மதுரை : மதுரையில் இரு சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 வயது டெய்லர் அப்துல்மஜீத்கான் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் அப்துல்மஜீத்கான். இப்பகுதியில் டெய்லராக உள்ளார்.
இவரது நண்பரான சக டெய்லர் வீட்டிற்கு அடிக்கடி செல்வார். இருநாட்களுக்கு முன் அப்துல்மஜீத்கான் சென்றபோது நண்பரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பூங்காவிற்கு விளையாட அழைத்துச்சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
அதேபோல் அங்கு விளையாடிய மற்றொரு 10 வயது சிறுமிக்கும் தொந்தரவு கொடுத்தார்.
இதுகுறித்து வீடு திரும்பியதும் பெற்றோரிடம் சிறுமிகள் கூறினர்.
போலீசாருக்கு பெற்றோர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அனைத்து தெற்கு மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கில் அப்துல்மஜீத்கானை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., அரசின் எக்ஸ் தளப்பக்கம் இந்தியாவில் முடக்கம்
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்
-
கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள் நோக்கம் என்ன?
-
காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?
-
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
Advertisement
Advertisement