பாக்.,கை பயங்கரவாத இயக்கமாக அறிவியுங்க: கபில் சிபல்

7

புதுடில்லி : ''பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் நாட்டை பயங்கரவாத அமைப்பாக கூறி, அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும்,'' என, பிரபல வழக்கறிஞரும், ராஜ்யசபாவின் சுயேச்சை எம்.பி,.யுமான கபில் சிபல் நேற்று கூறினார்.

பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அவர் நேற்று அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னணியில் அந்நாடு உள்ளது என்பது, அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி அசிம் முனிர் பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது.

'நமது தொப்புள் கொடி உறவு' என காஷ்மீரை, பாகிஸ்தான் ராணுவ தளபதி குறிப்பிடுகிறார்.

இதிலிருந்தே, பஹல்காம் பள்ளத்தாக்கு படுகொலைகளுக்கு பின்னணியில் பாகிஸ்தான் நாடு உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே, அந்த நாட்டை, பயங்கரவாத அமைப்பு என கூறி, சர்வதேச கிரிமினல் கோர்ட்டில், அந்த நாட்டுக்கு எதிராக, இந்தியா வழக்கு தொடர வேண்டும்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தானை பயங்கரவாத இயக்கமாக, பயங்கரவாத சட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

Advertisement