சிவில் சர்வீஸ் தேர்வு வெற்றி தனிநபர் சாதனையல்ல

மதுரை: ''சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 80 வது இடம் (ரேங்க்) பெற்றது எனது தனிப்பட்ட சாதனையல்ல. குடும்பத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவே சாதிக்க உதவியது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ராதாகிருஷ்ணன்.
மின்வாரியத் தலைவராக இருக்கும் ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் எம்.பி.பி.எஸ்., முடித்து எம்.டி., பொதுமருத்துவம் பயில்கிறார். எம்.டி., படிப்போடு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி அகில இந்திய அளவில் 80 வது இடம் பெற்றார்.
வெற்றி குறித்து அரவிந்த் கூறியதாவது:அப்பா ராதாகிருஷ்ணன் கலெக்டராக இருக்கும் போதிருந்து அவரது சமூக பழக்கவழக்கங்களை கவனித்து வருகிறேன். பள்ளிப்படிப்புக்கு மட்டும் தமிழகத்தில் 7 பள்ளிகள், டில்லியில் ஒரு பள்ளி என மாறி மாறி படித்ததால் அனைவருடன் கலந்து பழகுவதற்கும் பல்வேறுபட்ட பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
நானும் கலெக்டராக வேண்டும் என நினைக்கவில்லை. பெற்றோரும் சிவில் சர்வீஸ் படிக்க வற்புறுத்தியதில்லை.
21 வயது வரை டாக்டர் தான்
எம்.பி.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று டாக்டராக சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு தான் 21 வயது வரை இருந்தது. சிவில் சர்வீஸ், குரூப் ஏ, பி சர்வீஸ் வேலைகளின் மூலம் டாக்டர் பணியை விட சமுதாயத்தில் மக்களுக்கு அதிக சேவை செய்ய முடியும் என்ற சிந்தனை வந்த போது சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரானேன்.
இரண்டு முறை முயற்சித்த போது வெற்றி கிடைக்கவில்லை. மூன்றாம் முயற்சியில் அகில இந்திய அளவில் 361 வது இடம் கிடைத்தது. அந்தநேரம் எம்.டி., படிக்க ஆரம்பித்ததால் படிப்பை முடித்த பின் மீண்டும் சிவில் சர்வீஸ்க்கு முயற்சி செய்ய நினைத்து ஓராண்டு இடைவெளி விட்டேன். 2024ல் மீண்டும் தேர்வெழுதினேன். இந்த முறை அகில இந்திய அளவில் 80 வது இடம் கிடைத்துள்ளது.
குடும்பத்தினர் ஒத்துழைப்பு
பள்ளிப்பாடம் முதல் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பொருளாதார பாடம் கற்றுக் கொடுத்தது வரை அம்மா கிருத்திகா உதவியாக இருந்தார். பாட்டி மோகனராணி ஆங்கிலப்பாடம் கற்றுக் கொடுத்தார். டில்லி போன போது நேர்முகத்தேர்வு நேரத்தில் பாட்டி கூடவே இருந்தார். தேர்வெழுத தயாராகும் முறையை அப்பா விளக்கினார். தேர்வில் வெற்றி பெற்றதற்கு குடும்பத்தினரின் முழுமையான ஆதரவும் ஒரு காரணம்.
வெற்றியாளராக...
வெற்றியாளராக இருக்க நான் தேர்ந்தெடுத்தது சிவில் சர்வீஸ் வழி. இத் தேர்வெழுதும் எல்லோருக்குமே 'நாம் சரியாக எழுதியுள்ளோமா' என்ற சந்தேகம் வரும். அது இயல்பானது தான். புத்தகத்தை மட்டும் படிக்காமல் வெளியுலகில் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டால் தான் நீங்கள் கற்றுக் கொண்டதை தேர்வில் எழுதும் போது கூடுதல் மதிப்பெண்களுக்கு வழிவகுக்கும்.
டாக்டராக வேலை செய்து கொண்டே படித்தேன். இரவுப்பணியின் போது அடுத்த நாட்களில் பாடங்களை படிக்க முடியாது. அதற்கேற்ப வாரத்தின் மீதி நாட்களில் படித்தேன். தினமும் எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதை விட எவ்வளவு சரியாக படிக்கிறோம் என்பதே வெற்றிக்கு முக்கியம் என்றார்.
மேலும்
-
டில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை
-
பாக்., அரசின் எக்ஸ் தளப்பக்கம் இந்தியாவில் முடக்கம்
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்
-
கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள் நோக்கம் என்ன?
-
காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?