குமுதா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

திருப்பூர்; நம்பியூர், குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: எங்கள் பள்ளி மாணவன் சபரிகிருஷ்ணா, 600க்கு 586 மதிப்பெண் பெற்றார். தேர்வெழுதிய மாணவர்களில், 3 பேர் கணித பாடத்திலும், 3 பேர் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திலும், 6 பேர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்திலும், ஒருவர் இயற்பியல் பாடத்திலும், ஒருவர் வேதியியல் பாடத்திலும் 100 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தனர்.

தேர்வெழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். தேர்வெழுதிய, 106 மாணவர்களில், 20 பேர், 550 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 51 மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச அளவில், விளையாட்டில் சாதனை படைத்த பள்ளியாகவும் இப்பள்ளி திகழ்கிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

சாதித்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், பாராட்டி பரிசு வழங்கினார். துணை தாளாளர் டாக்டர் சுகந்தி, பள்ளி செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலரும் பாராட்டினர்.

Advertisement