ப.வேலுார் வார சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது. இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார் மற்றும் ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு கொண்டு வரப்படும் நாட்டுக்கோழிகளை, வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 650 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று, 500 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, குரு பெயர்ச்சியை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்ததால் நாட்டுக்கோழி விலை சரிந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3,400 கோடி சொகுசு விமானம்; டிரம்பிற்கு கத்தார் அரசு பரிசு
-
அமெரிக்க மத்தியஸ்தத்தை ஏற்கிறதா அரசு? பிரதமர் பதில் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை
-
முதல்வருடன் துணைவேந்தர் சந்திப்பு
-
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
-
சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியான சர்வே பணியில் தி.மு.க.,
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது
Advertisement
Advertisement