பா.ம.க., பிளக்ஸ் பேனரில் அ.தி.மு.க., நிர்வாகிகள் போட்டோ

ஈரோடு: வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை ஒட்டி, ஈரோட்டில் வ.உ.சி., பூங்கா முன்புறம் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் அ.தி.மு.க., மாநகர், 51வது வட்ட செயலாளர் பழனிச்சாமி மகன்களான வினோத்குமார், ஹரி ஆகியோரின் போட்டோ இடம் பெற்றுள்ளது. வினோத்குமார் அ.தி.மு.க.,வில் அண்ணா கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். ஹரி கட்சி உறுப்பினராக உள்ளார். ஹரியின் திருமணத்தில் பொது செயலாளர் இ.பி.எஸ்., கலந்து கொண்டார். இந்நிலையில் இருவரும் பா.ம.க., வைத்த பேனரில் இடம் பெற்றிருப்பது, அ.தி.மு.க.,வில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுபற்றி மாநகர், 51வது வட்ட செயலாளர் பழனிச்சாமி கூறுகையில், ''எங்கள் குடும்பம் பாரம்பரிய அ.தி.மு.க., குடும்பம். தெரியாமல் பேனரில் என் மகன்கள் போட்டோ வந்துள்ளன. அதை அகற்ற சொல்கிறேன்,'' என்றார்.

Advertisement