கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆண்டிபட்டி; ஜம்புலிப்புத்துார் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் நடந்தது.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. கோயில் சித்திரைத்திருவிழா மே 2ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் விழாவில் தினமும் கதலி நரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 7ம் நாளில் சுவாமி திருக்கல்யாணம், 9ம் நாளில் சுவாமி திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மாலை 6:40 மணிக்கு பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் வடம் பிடித்து 'கோவிந்தா' கோஷத்துடன் தேர் இழுத்தனர். தேர் வடக்குத் தெருவில் நிலை நிறுத்தப்பட்டது. இன்றும் தேரோட்டம் நடக்க உள்ளது.

Advertisement