துப்புரவு பணியாளர்கள் நியமனம் அவசியம்

கம்பம்; ; ''ஊராட்சிகளில் தேவைப்படும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை வேண்டும்.'' என, கோரிக்கை எழுந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெரு விளக்குகள், பொது சுகாதாரம் பராமரிப்பு போன்றவைகளை கையாள்வதில் நீண்ட காலமாக சிக்கல் நீடித்து வருகிறது. பேரூராட்சிகள், நகராட்சிகளில் தேவையான அளவு பொது நிதி இருப்பு இருப்பதால், துப்புரவு பணிகளில் சுணக்கம் இருப்பது இல்லை. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் போதிய நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சிகளில் துப்புரவுப் பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.

அனைத்திலும் துப்புரவு பணியாளர் எண்ணிக்கை ஒன்றிரண்டு என்ற நிலையில் தான் இன்றளவும் உள்ளது. இதை சரி பண்ண ஒவ்வொரு ஊராட்சியிலும் அதன் பரப்பு, மக்கள் தொகை, சேகரமாகும் குப்பை அளவு, தற்போதுள்ள பணியாளர் எண்ணிக்கை அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement