பூங்காவில் விளையாட்டு சாதனங்கள் பழுது

திருநகர்: திருநகர் பொழுது போக்குப் பூங்காவுக்குள் விளையாட்டுச் சாதனங்கள் சேதமடைந்து கிடப்பதால் சிறுவர்கள் விளையாட முடியாமல் அவதியுறுன்றனர்.

திருநகர் அண்ணா பூங்காவுக்குள் ஒரு பகுதியில் சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களிலும், மாலை நேரங்களிலும் குழந்தைகள் பூங்காவுக்குள் விளையாடி பொழுதைக் கழித்து வந்தனர். இந்த விளையாட்டு சாதனங்கள் பலவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் சாதனங்களை தொடாமல், குழந்தைகள் மணலில் ஓடி விளையாடுகின்றனர். பல குழந்தைகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

விளையாட்டு சாதனங்களை விரைவில் சீரமைக்க நடவடிக்கை தேவை.

Advertisement