விஜய்க்கு அதிக இடங்கள்: சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்

77

'தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய் கட்சியான த.வெ.க., தனித்து போட்டியிட்டு, 95 முதல் 105 தொகுதிகளை கைப்பற்றும்' என, தனியார் நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரிய வந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய, மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சர்வே எடுத்துள்ளது. இதில், பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி - அ.தி.மு.க., கூட்டணி - த.வெ.க., தனித்து போட்டியிட்டால் எந்த கட்சிக்கு உங்கள் ஓட்டு என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.


இதற்கு மக்கள் அளித்த விடை அடிப்படையில், த.வெ.க., 95 முதல் 105; தி.மு.க., 75 முதல் 85; அ.தி.மு.க., 55 முதல் 65 தொகுதிகளையும், நாம் தமிழர் மற்றும் இதர கட்சிகள், ஐந்து முதல் 10 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓட்டு சதவீதம் அடிப்படையில், த.வெ.க., 34.55; தி.மு.க., 30.20; அ.தி.மு.க., 27.85; நா.த.க., 4.40; இதர கட்சிகள் 3 சதவீத ஓட்டுகள் பெறும். முதல்வர் வேட்பாளர் என்ற அடிப்படையில், முதல்வர் ஸ்டாலினுக்கு 18.6; விஜய்க்கு 39.4; பழனிசாமிக்கு 18.6; அண்ணாமலைக்கு 4.7; இதர கட்சிகளின் வேட்பாளர்களுக்கு 4.4 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.


ஜாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட சர்வேயில், முக்குலத்தோர் சமுதாயத்தில், அ.தி.மு.க.,வுக்கு 44.2; த.வெ.க.,வுக்கு 34.5; தி.மு.க.,வுக்கு 17.3 சதவீதம் ஆதரவு உள்ளது.


வன்னியர் ஜாதியில் த.வெ.க.,வுக்கு 39.5; அ.தி.மு.க.,வுக்கு 36.2; தி.மு.க.,வுக்கு 19.0 சதவீதம் கிடைத்துள்ளன. வெள்ளாளர் கவுண்டர் ஜாதியில், அ.தி.மு.க., வுக்கு 35.8; த.வெ.க.,வுக்கு 35.3; தி.மு.க.,வுக்கு 20.5 சதவீதம் கிடைத்துள்ளன. இந்த சர்வே, தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.



- நமது நிருபர் -

Advertisement