'கிரியேட்டிவ்' முறை கற்பித்தலால் மதுரைக்கு மூன்றாம் இடம் : ஆங்கிலத்தில் அசத்திய உசிலை மாணவர்கள்

மதுரை: மாணவர்களுக்கு புரியும் வகையில், 'கிரியேட்டிவ்' ஆன கற்பித்தலால் மாநில திறனடைவு (சிலாஸ்) தேர்வில் மதுரைக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. அடுத்தமுறை முதலிடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என சி.இ.ஓ., ரேணுகா தெரிவித்தார்.
மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், இடைநிற்றலை கண்டறிந்து அதற்கு தீர்வுகாணும் உக்திகளை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. பிப்ரவரியில் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் மதுரை மாவட்டம் 3வது இடம் பிடித்தது.
இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடத்தில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாவட்டங்களில் கன்னியாகுமரி, கடலுாரை அடுத்து மதுரை 3வது இடத்திலும், கல்வி ஒன்றியங்கள் அளவில் ஆங்கிலம் பாடத்தில் தக்கலை, திருவட்டாறு, ஆரணியை அடுத்து உசிலம்பட்டி 4வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து சி.இ.ஓ., ரேணுகா கூறியதாவது: சென்றாண்டு தேசிய அடைவுத் தேர்வில் (நாஸ்) மதுரை 21 வது இடத்திற்கு சென்றது. தற்போது 'சிலாஸ்' தேர்வில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. மாணவர்களுக்கு புரியும் வகையிலும், 'கிரியேட்டிவ்' ஆன கற்பித்தலுக்கு கிடைத்த பலன். இதுதவிர பாடத்தை தாண்டி அர்ப்பணிப்புடன் கற்பித்தல் பணி மேற்கொண்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். அடுத்தாண்டு மதுரை முதலிடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
-
சிவகாசியில் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் அவதி
-
முழு நிலவுக்கு ஆராதனை
-
செங்கோட்டை--சென்னை அரசு விரைவு பஸ்சில் ஏசி பழுதால் வாக்குவாதம்
-
இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க விண்ணப்பிக்கலாம்
-
கட்டிய லுங்கியுடன் தாய்லாந்து தப்பியோட்டம்! அதிகாலை 3 மணிக்கு எஸ்கேப்பான வங்கதேச மாஜி அதிபர்