கோயிலில் ரேஷன் கடை அல்லல்படும் பொதுமக்கள்

மேலுார்: சுந்தரராஜபுரத்தில் கோயிலில் ரேஷன் கடை செயல்படுவதால் பக்தர்கள் சுவாமி கும்பிட முடியாமலும், காடுதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
சுந்தரராஜபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை 15 ஆண்டுகளாக செயல்படுகிறது. இக்கடையில் புதுார், சங்கர ஆசிரமம், களப்பாறை, வெளுத்துப்பட்டி,, சுந்தரராஜபுரம் பகுதி கார்டு தாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.
ரேஷன் கடை போதிய பராமரிப்பு இல்லாமல் 6 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து சிதிலமடைந்தது. மேலும் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு வருவோர் மீது சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் கடை மூடப்பட்டு 6 ஆண்டுகளாக மந்தை அருகே உள்ள நெவுலிநாத சுவாமி கோயிலில் செயல்படுகிறது.
கார்டுதாரர்கள் கூறியதாவது : கோயிலில் ரேஷன் கடை செயல்படுவதால் மன அமைதிக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி கும்பிட சிரமப்படுகின்றனர்.
இடப்பற்றாக்குறையால் ரேஷன் பொருள்களை கோயிலுக்குள் வைத்துவிட்டு கார்டுதாரர்கள் திறந்தவெளியில் காத்துக் கிடக்கிறோம்.
பகுதி நேர ரேஷன் கடை என்பதால் ஒரே நேரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் கோயிலில் கூடுவதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.
'அந்த நாள்' பெண்கள் கோயிலுக்குள் வர முடியாமல் பொருட்களை வாங்க முடியவில்லை. புதிய ரேஷன் கடை குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கண்டு கொள்ளவில்லை.
புதிய ரேஷன் கடை கட்டியாக வேண்டும் என்றார்.
டி.எஸ்.ஓ., விவேகானந்தன் கூறுகையில், நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!