'உயிர்' பெறுமா எரிவாயு மயானம்

சோழவந்தான்:சோழவந்தானில் ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை 11 மாதங்களாக திறக்கப்படாமல் பாழாகி வருகிறது.

பேரூராட்சியின் மூலதன மானியத்திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளாக மயானம் கட்டுமான பணி நடந்து, கடந்த ஜூனில் முடிந்தன. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர நகர் ஊரமைப்பு துறையின் அனுமதி கேட்கப்பட்டது. அதன் உதவி இயக்குனர் ஆய்வு செய்து சென்ற நிலையில் 11 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது உரிய பதில் இல்லை.

மக்கள் கூறுகையில், ''மயானம் திறக்கப்படாததால் மாடு கட்டவும், மது அருந்தவும் பயன்படுவதோடு, சமூக விரோதிகள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் மாறியுள்ளது. போதையில் ஜன்னல் கண்ணாடிகள், மின் பெட்டியை உடைத்துள்ளனர். மின் வயர்களை திருடியுள்ளனர்.

பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement