மல்யுத்தம்: நேஹா அசத்தல்

புதுடில்லி: மல்யுத்த தகுதி போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற அன்ஷுவை வீழ்த்தினார் நேஹா.
மங்கோலியாவில் சர்வதேச மல்யுத்த ரேங்கிங் தொடர் மே 29-ஜூன் 1ல் நடக்க உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத், நேரடியாக பங்கேற்க உள்ளார். ஒலிம்பிக் போட்டிக்குப் பின் இவர் களமிறங்கும் முதல் தொடர் இது. மற்ற இந்திய நட்சத்திரங்களை தேர்வு செய்ய தகுதி போட்டி டில்லியில் நடந்தது.
பெண்களுக்கான 57 கிலோ பிரிவு முதல் சுற்றில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற அன்ஷு மாலிக், 17 வயது பிரிவில் உலக சாம்பியன் ஆன ஹரியானாவின் நேஹா சங்வான் மோதினர். இதில் நேஹா வெற்றி பெற்றார். அடுத்து நடந்த பைனலில் நேஹா, டில்லியின் நேஹா சர்மாவை சந்தித்தார். துவக்கத்தில் 0-4 என பின்தங்கிய நேஹா, முடிவில் 7-4 என்ற கணக்கில் பெற்று, மங்கோலிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
68 கிலோ பிரிவில் மோனிகா, ஷிர்ஷ்டி மோதினர். மோனிகா 5-4 என வென்றார்.
மற்ற பிரிவுகளில் நீலம் (50 கிலோ), புஷ்பா (55), சிக் ஷா (65), ஹர்சித்தா (72) மங்கோலிய தொடரில் பங்கேற்க தகுதி பெற்றனர். ரீத்திகா (76), மணிஷா (62), அன்டிம் பங்கல் (53), முஸ்கான் (59) நேரடியாக பங்கேற்க உள்ளனர்.

Advertisement