தென் ஆப்ரிக்க அணியில் முத்துசாமி * உலக டெஸ்ட் பைனலுக்கு...

ஜோகனஸ்பர்க்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த தென் ஆப்ரிக்கா (69.44 சதவீதம்), ஆஸ்திரேலிய (67.54) அணிகள் பைனலுக்கு முன்னேறின. இந்திய அணி (50.00) மூன்றாவது இடம் பிடித்து வெளியேறியது.
இங்கிலாந்தின் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11ல் துவங்குகிறது. இதற்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. ஊக்க மருந்து பயன்படுத்தி, ஒரு மாதம் தடைவிதிக்கப்பட்டு மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இடம் பெற்றார். தமிழக வம்சாவளி 'ஸ்பின்னர்' சேனுரன் முத்துசாமி இடம் பிடித்துள்ளார்.
அணி விபரம்: பவுமா (கேப்டன்), பெடிங்ஹாம், கார்பின், டோனி டி ஜோர்ஜி, யான்சென், மஹாராஜ், மார்க்ரம், முல்டர், சேனுரன் முத்துசாமி, லுங்கிடி, பேட்டர்சன், ரபாடா, ரிக்கிள்டன், ஸ்டப்ஸ், வெர்ரேன்.

கம்மின்ஸ் கேப்டன்
ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டது.
கம்மின்ஸ் (கேப்டன்), போலந்து, அலெக்ஸ் கேரி, கேமரான் கிரீன், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், இங்லிஸ், கவாஜா, கான்ஸ்டஸ், குனேமன், லபுசேன், லியான், ஸ்மித், ஸ்டார்க், ஹேசல்வுட், வெப்ஸ்டர்.

Advertisement