கால்பந்து: அரையிறுதியில் இந்தியா

யுபியா: தெற்காசிய கால்பந்து (19 வயது) தொடரின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
அருணாச்சல பிரதேசத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
நேற்று 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, நேபாள அணிகள் மோதின. போட்டியின் 28 வது நிமிடத்தில் நேபாள வீரர் தலையில் பட்டு வந்த பந்தை லாவகமாக கொண்டு சென்று, கோலாக மாற்றினார் இந்தியாவின் ரோஹன் சிங். அடுத்த நிமிடத்தில் இந்திய வீரர்கள் அசத்தினர்.
இம்முறை சக வீரர் டேனி மெய்டெய் அடித்த பந்தை பெற்ற ஓமங் டோடம், கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் ரோஹன் சிங்(75வது நிமிடம்) மற்றொரு கோல் அடித்தார். தவிர டேனி மீட்டெய் (85) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் 2 போட்டியிலும் வென்று, 6 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் மாலத்தீவு அணியை (மே 16) சந்திக்க உள்ளது.
மேலும்
-
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
-
சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியான சர்வே பணியில் தி.மு.க.,
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது
-
10ம் வகுப்பு தேர்வில் 88.66 சதவீதம் தேர்ச்சி; மாநிலத்தில் 42 அரசு பள்ளிகள் 'ஆல் பாஸ்'
-
டிரைவர் தற்கொலை
-
மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?