கோலாரில் மீண்டும் கால் பதித்த முனியப்பா 15 நாளைக்கு ஒருமுறை ஆஜராகவும் திட்டம்

கோலார் லோக்சபா தொகுதியில், தொடர்ந்து ஏழு முறை எம்.பி.,யாக இருந்தவர் கே.ஹெச்.முனியப்பா. உட்கட்சி நெருக்கடியால் அதே தொகுதியில், 2019ல் தோல்வி அடைந்தார். அரசியல் பயணத்தில் ஏற்பட்ட தோல்வியால், கோலார் மாவட்டத்தை விட்டு வெளியேறி, கடந்த சட்டபை தேர்தலில் தேவனஹள்ளியில் போட்டியிட்டு வென்றார். உணவுத்துறை அமைச்சராக உள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில், கோலார் தொகுதியில் தனது மருமகனுக்கு சீட் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தார். இதனால், கோலார் பக்கம் செல்வதை நிறுத்திக் கொண்டார். தற்போது மீண்டும் இரண்டாம் இன்னிங்சை துவக்கி உள்ளார்.
இதற்காக, கோலாரின் ஹாரோஹள்ளியில் பூட்டி வைத்திருந்த அவரின் வீட்டுக்கு பெயின்ட்டிங் வேலைகளை செய்து முடித்து உள்ளார். எந்த இடையூறும் வராமல் இருக்க, புத்த பவுர்ணமி தினமான நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.
இப்பூஜையில் தன் மகளான, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவையும் ஆஜர்படுத்தினார். மேலும், பங்கார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., நாராயணசாமி, கலெக்டர் எம்.ஆர்.ரவி, எஸ்.பி., நிகில், மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரி பிரவீன் பாகேவாடியும் பங்கேற்றனர்.
இவர்களை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்களான மாவட்ட காங்கிரஸ் தலைவர் லட்சுமி நாராயணா, செயல் தலைவர் ஊர்பாகிலு சீனிவாஸ், பிளாக் காங்கிரஸ் தலைவர் பிரசாத் பாபு, மாவட்ட எஸ்.சி., பிரிவின் கே.ஜெயதேவ் என பலரும் ஆஜராகினர்.
அவர்கள் மத்தியில், முனியப்பா கூறுகையில், 'எனக்கு அரசியல் வாழ்வளித்தது கோலார். இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை கோலாருக்கு வருவேன்.
தொகுதி மக்களையும், கட்சியினரையும் சந்திப்பேன்; அவர்களின் கோரிக்கையை கேட்பேன். எனக்கு வாழ்வளித்த மக்களின் கஷ்ட, நஷ்டங்களில் பங்கேற்பது என் கடமை. அதன் பணியை மீண்டும் தொடருவேன்' என்றார்.
இது மட்டுமின்றி, 'மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், மூத்தவர் ஒருவருக்கு முதல்வர் பதவி அளிக்க வேண்டும். அவர் அனுபவம் மிக்கவராக இருப்பார். கோலார் ஜில்லா பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து, கோலார் - -சிக்கபல்லாபூர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அனைவருமே ஒருங்கிணைந்து செயல்பட்டு, வெற்றி பெற வேண்டும்' என்றும் தன் விருப்பத்தை தெரிவித்தார்.
- நமது நிருபர் -
மேலும்
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது
-
10ம் வகுப்பு தேர்வில் 88.66 சதவீதம் தேர்ச்சி; மாநிலத்தில் 42 அரசு பள்ளிகள் 'ஆல் பாஸ்'
-
டிரைவர் தற்கொலை
-
மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?
-
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் நிலாச்சோறு: குடும்பமாக பங்கேற்பு; மதநல்லிணக்கத்தை காட்டுவதாகவும் அமைந்தது
-
1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது