அனைத்து கட்சி கூட்டம் காங்., தலைவர் நெருக்கடி

கலபுரகி ''போர் நிறுத்தம் குறித்து மத்திய அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவது குறித்து கட்டாயம் கேள்வி எழுப்பப்படும்,'' காங்கிரஸ் தலைவர் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

கலபுரகியில், நேற்று அளித்த பேட்டி:

நமது எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

போர் நிறுத்தம் தொடர்நாக சில தொலைபேசி ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட வேண்டும். அவரது அறிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும். அப்போது, போர் நிறுத்தம் குறித்த உண்மையான தகவல்கள் வெளியில் வரும்.

இது தொடர்பாக, புதுடில்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், அனைத்து கட்சி கூட்டம் குறித்தும் விவாதிக்கப்படும். மத்தியஸ்தம் செய்து போரை நிறுத்தியது நான் தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து கூறி வருகிறார். அவர் விளம்பரத்திற்காக, செய்கிறார். இது தொடர்பாக கட்டாயம் கேள்வி எழுப்பப்படும்; பிரதமர் பதில் அளிக்க வேண்டும்.

நேற்று முன்தினம் பிரதமர் பேசும் போது, அமெரிக்க அதிபர் மத்தியஸ்தம் செய்தது குறித்து பேசி இருக்க வேண்டும். அப்போது, தான் மக்களுக்கு உண்மை தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement