சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டியில் 101 ரன்கள் குவித்து வீரர் அதிரடி

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஐந்தாவது டிவிஷன் போட்டிகள் சி.ஐ.டி., உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது.
கே.எப்.சி.சி., அணியும், பெனடிக் போர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த கே.எப்.சி.சி., அணியினர், 37.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 165 ரன்கள் எடுத்தனர்.
வீரர் மணிகண்டன், 42 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர்கள் ரமேஷ், குமரேசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய பெனடிக் அணியினர், 31.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 111 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
எதிரணி வீரர்கள் அருண்குமார் நான்கு விக்கெட்களும், பிரசாந்த் மூன்று விக்கெட்டும் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
ஒன்றாவது டிவிஷன் போட்டியில், ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், கோவை டஸ்கர்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த ஜாலி ரோவர்ஸ் அணி, 50 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 249 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் நிர்மல்குமார், 101 ரன்களும், கவுசிக், 63 ரன்களும் எடுத்தனர்.
கோவை டஸ்கர்ஸ் அணியினரோ, 28.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 119 ரன்கள் எடுத்தனர்.
வீரர் கவுசிகன், 40 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். எதிரணி வீரர் ஆதித்யன் குமரன் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
மேலும்
-
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
-
சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியான சர்வே பணியில் தி.மு.க.,
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது
-
10ம் வகுப்பு தேர்வில் 88.66 சதவீதம் தேர்ச்சி; மாநிலத்தில் 42 அரசு பள்ளிகள் 'ஆல் பாஸ்'
-
டிரைவர் தற்கொலை
-
மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?