பஸ் நிலையத்தில் பணம் பறித்த இருவர் கைது

கோயம்பேடு கோயம்பேடு, சம்மந்தம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 48. இவர், தள்ளுவண்டியில் கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அதிகாலை 2:00 மணியளவில், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆறாவது நடைமேடையில் நின்றிருந்த ரமேஷை, இருவர் தாக்கி 1,700 ரூபாய் பறித்து சென்றனர்.

இது குறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், பணம் பறிப்பில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் கண்ணன், 27, வேலுாரைச் சேர்ந்த தனுஷ், 24, ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவில் துாங்குவோரிடம் மொபைல் போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement