76,549 வீடுகளை சீரமைக்க ரூ.280 கோடி: அன்பரசன்

சென்னை, சென்னை கைலாசபுரம் மீனவர் குடியிருப்பு, செட்டித் தோட்டம், மீனாம்பாள் சிவராஜ் நகர் ஆகிய இடங்களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்படும் குடியிருப்பு பணிகளை அமைச்சர் அன்பரசன் நேற்று ஆய்வு செய்தார்.

அதன்பின், அவர் கூறியதாவது:

சென்னையில், 13 இடங்களில், 586 கோடி ரூபாய் மதிப்பில், 5,180 அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. அடுத்த சில மாதங்களில் இந்த வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும்.

வாரியத்தால், 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க திட்டமிட்டு உள்ளோம். இதன் அடிப்படையில், 152 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளன.

நடப்பு நிதி ஆண்டில், 137 திட்ட பகுதிகளில், 76,540 வீடுகளை சீரமைக்க, 280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி பழைய வீடுகளை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.



























Advertisement