வெள்ளாற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு

சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம், சின்னகுப்பம், பு.ஆதனுார், அகர ஆலம்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தல் அதிகளவில் நடக்கிறது. குறிப்பாக, நள்ளிரவில் மணல் சாக்கு மூட்டைகளில் பிடித்து மினி டெம்போ, இருசக்கர வாகனங்கள், டிராக்டர் டிப்பர்களில் கடத்தப்படுகிறது.

ஒரு மூட்டை மணலை 150 முதல் 200 ரூபாய் விற்று விடுகின்றனர். ஆற்றில் மணல் அள்ள அரசு தடை விதித்தாலும் அதை பற்றி சிறிதும் கண்டு கொள்ளாமல் மணல் கடத்தல் பணியை ஜரூராக அரங்கேற்றி வருகின்றனர்.

மினி டெம்போ வைத்திருக்கும் நபர்கள் மணல் கடத்தம் போது, வாகனத்தின் சத்தம் கேட்காமல் இருக்க காஸ் சிலிண்டரை பயன்படுத்தி இயக்கி வருகின்றனர். மணல் திருடும் நபர்கள் மீது போலீசார் வழக்குப் போட்டாலும் மணல் திருட்டு என்பது தொடர்கதையாகவே உள்ளது.

டிராக்டர் டிப்பர்களில் நள்ளிரவு நேரங்களில் மணல் கடத்தும் நபர்கள் கட்டுமான பணிக்கு மூட்டை மூட்டையாக விற்று நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், மணல் கடத்தல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Advertisement