வாகனம் மோதி மான் பலி

அவலுார்பேட்டை : வளத்தி அருகே வாகனம் மோதி மான் இறந்தது.

வளத்தி அடுத்த அண்ணமங்கலம் கிராமத்தில் நேற்று மதியம் 12:00 மணிக்கு சாலையை கடந்த மான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மான் சம்பவ இடத்திலேயே இறந்தது.இதே போல் அவலுார்பேட்டையில் ஒரு தெருவில் பெண் மயில் இறந்து கிடந்தது.

தகவல் அறிந்து சென்ற செஞ்சி வனத்துறை அலுவலர்கள் மானையும், மயிலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனையில் மான் விபத்தில் இறந்ததும், இரண்டு மயில்கள் சண்டை போட்டதால் ஒரு மயில் இறந்ததும் தெரிய வந்தது.

Advertisement