கட்சி கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க பெண்களுக்கு 'டிமாண்ட்'

தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க ஆளும் கட்சியான தி.மு.க.,வும் எதிர்கட்சியான அ.தி.மு.க., தீவிர களப்பணி ஆற்றி வருகின்றன.

குறிப்பாக, சிதம்பரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., வினர் அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க., வினரோ கடந்த கால ஆட்சியில் செய்த சாதனை திட்டங்களை விளக்கி கூறி பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க.,-அ.தி.மு.க., மாறி மாறி பிரசாரம் செய்து வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளின் கிளை செயலாளர்கள் தங்கள் கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் நிர்வாகிகள் 10 முதல், 20 பேரை வரை ஆர்வத்துடன் அழைத்து சென்று, பலத்தை காட்டி கூட்டம் சேர்த்தனர்.

ஆனால், தற்போது இந்த நிலை மாறியுள்ளது. கூட்டம் சேர்க்க பெண்களை அழைத்து செல்ல தலா ரூ. 200 ரூபாய் தரப்படுகிறது. அதுவும் இரண்டு இடங்களில் கூட்டம் நடத்தப்பட்டால் பெண்களை அழைத்து செல்ல டிமான்ட் ஏற்பட்டுள்ளது.

Advertisement