இருளர் மக்களுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கல்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுக்காடு ஊராட்சியிலுள்ள இருளர் மக்களுக்கு, கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
திருமுக்காடு ஊராட்சி பகுதியில், 25க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு நிரந்தர வீடு இல்லாத நிலையில் விவசாயம் மற்றும் கூலி வேலைகளுக்கு பல்வேறு கிராமப் பகுதிகளுக்குச் சென்று, அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர். ஓலை குடிசை வீடுகளில் வசித்து வந்தனர்.
இவர்கள் வெயில் மற்றும் மழைக் காலங்களில், தங்களின் உடைமைகளை பாதுகாக்கும் வகையிலும், நிரந்தரமாக ஒரே கிராமத்தில் வசிக்கும் வகையிலும், மத்திய அரசு சார்பில், 'ஜன்மன்' திட்டம் 2024--25ம் நிதியாண்டில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், 37 இருளர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதில், திருமுக்காடு ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 16 இருளர் குடும்பங்களுக்கு, தலா 5.7 லட்சம் ரூபாய் மதிப்பில், கான்கிரீட் வீடுகள் கட்ட, பயனாளிகளுக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன், திருமுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், ஊராட்சி செயலர் சுபாஷ் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது
-
10ம் வகுப்பு தேர்வில் 88.66 சதவீதம் தேர்ச்சி; மாநிலத்தில் 42 அரசு பள்ளிகள் 'ஆல் பாஸ்'
-
டிரைவர் தற்கொலை
-
மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?
-
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் நிலாச்சோறு: குடும்பமாக பங்கேற்பு; மதநல்லிணக்கத்தை காட்டுவதாகவும் அமைந்தது
-
1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது