சூணாம்பேடு பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அவசியம்

சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பெருமாள் கோவில் தெரு, ஜமீன் தெரு, அங்காளம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குழாய்களில் இருந்து வெளியேறும் உபரிநீர், சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது வரை கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதியில் கழிவுநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement