சித்ரா பவுர்ணமி உற்ஸவம்

கீழக்கரை: கீழக்கரை அருகே வைகை கிராமத்தில் உள்ள புத்தாள கண்மாய் கரையோரம் சிவகாளியம்மன் கோயில் உள்ளது. 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டனர். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேர்த்திக்கடன் பக்தர்களால் அக்னி சட்டி, காவடி உள்ளிட்டவைகள் எடுத்து வந்தனர்.

அம்மனுக்கு தொடர் பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை பூஜாரி முருகன் செய்திருந்தார். ஏற்பாடுகளை சிவ காளியம்மன் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement