உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முதல்வர் சரித்திரம் படைத்துள்ளார் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேச்சு

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்டம், கோலியனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் முத்தாம்பாளையத்தில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ஜெயா பன்னீர்செல்வம் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், அவை தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் தண்டபாணி, சங்கர், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் பட்டுஆறுமுகம், பொருளாளர் காமராஜ், மாவட்ட கவுன்சிலர் வனிதா அரிராமன், துணை சேர்மன் உதயகுமார், ஊராட்சி தலைவர் சத்யா ராஜேந்திரன், அசோக்சதாசிவம், வல்லபன் முன்னிலை வகித்தனர்.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தும் ஒரே முதல்வர் ஸ்டாலின். மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, நான் முதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மகளிர்களுக்கு இலவச பஸ் என பல முன்னோடி திட்டங்களை வகுத்துள்ளார்.
இதனால், இந்தியாவிலேயே உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சரித்திரம் படைத்துள்ளார் என கூறினார்.
தொடர்ந்து, தலைமை கழக பேச்சாளர் மங்களம் பிரபாகரன் சிறப்புரையாற்றினர். தெற்கு ஒன்றி செயலாளர் முருகவேல், பேரூராட்சி செயலாளர் ஜீவா, மாவட்ட இளைஞரணி தினகரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வம், சுரேஷ், சங்கர், முத்துசாமி, ரமேஷ், வீரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கிளை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.