சித்ரா பவுர்ணமி விளக்கு பூஜை

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு விளக்கு பூஜை நடந்தது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு மகா தீபா ஆராதனை நடந்தது.

பூஜைகளை கோவில் மாலோலன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர்.

Advertisement