சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

கண்டாச்சிபுரம், : முகையூர் ஒன்றியம் பில்ராம்பட்டு ஊராட்சியில் தி.மு.க., சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். முகையூர் ஒன்றிய சேர்மேன் தனலட்சுமி உமேஸ்வரன், ஊராட்சி தலைவர் கனகா முன்னிலை வகித்தனர். முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக வண்ணைபுகாரி, கீர்த்தனா தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மேன் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி, ஒன்றிய கவுன்சிலர் மீனாகுமாரி, முகையூர் தெற்கு ஒன்றிய தி.முக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை முகையூர் ஒன்றிய திமுகவினர் செய்தனர்.

Advertisement